Vettri

Breaking News

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செமன் மீன் குறித்த அதிர்ச்சித் தகவல்!




 இலங்கைக்கு சீனாவில் இருந்து மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் நிதி முகாமையாளர் வசந்தகுமார ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செமன் மீன் குறித்த அதிர்ச்சித் தகவல்! | A Type Of Seman Fish Imported Sri Lanka From China

நீதிமன்ற உத்தரவை மீறி இந்த வகை செமன் மீன்  லேபிள்கள் மாற்றப்படடு சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  செமன் மீன்களை தனியாகவும், டின்களை தனியாகவும் புதைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன்  28.03.2021ஆம் திகதி அன்று உற்பத்தி செய்யப்பட்டது எனவும் காலாவதி திகதி 28.03.2024 எனவும் பதிவிடப்பட்டுள்ளது.

No comments