மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா...
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஜெயிலர் படம் மூன்று நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நாள் வசூல்
அதன்படி ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் ரூ. 210 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.
இனி வரும் நாட்களில் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாத வசூல் சாதனையை ஜெயிலர் படம் செய்யும் என கூறப்படுகிறது.
No comments