வங்கிகளில் நிலையாக காணப்படும் டொலரின் பெறுமதி!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையானதாக உள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 311. 42 ரூபாய் மற்றும் 326.74 ரூபாய் ஆக மாற்றமடையாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 309.78 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் முதல் 325 ரூபாயாக மாற்றமடையாமலுள்ளது.
ஆனால் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே 314 ரூபாய் முதல் 315 ரூபாய் மற்றும் 326 ரூபாய் முதல் 327 ரூபாய் ஆக அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments