குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்ய முன்வந்துள்ள சீன நிறுவனம்..
சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, சிறிலங்கா பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த கோரிக்கைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்னும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சினோபெக்கிற்கு இலங்கையில் 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 20 எரிபொருள் நிலையங்களை சினோபெக்கிற்கு வழங்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சினோபெக் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரங்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments