Vettri

Breaking News

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைகின்றது..




வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருகிறது. சில நீர்த்தேக்கங்களின்; நீர் மட்டம் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக கருத்தாடலுக்குள்ளான சமனலவாவி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 2.5 வீதமாக குறைந்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சமனலவாவியில் இருந்து நீரை விநியோகிக்கும் உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 2.8 வீதமாக உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது....

No comments