திருடிய நகையை விழுங்கிய கொள்ளையன் வைத்தியசாலையில் அனுமதி!
கம்பஹாவில் திருடிய நகையை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, ஒருத்தோட்டை வீதியில் பயணித்த பெண்ணிடமே இவ்வாறு நகையை திருடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது சுற்றியுள்ளவர்கள் குறித்த மோட்டார்சைக்கிளை சுற்றி வளைத்துள்ளனர்.
அதனையடுத்து சாரதி தப்பியோடிய நிலையில் நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments