Vettri

Breaking News

ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் பிளாஸ்டிக்கை மனிதன் உட்கொள்கிறார்!




ஒரு நபர் ஒரு வாரத்திற்கு அண்ணளவாக ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார், இது ஒரு கிரெடிட் கார்டின் அளவாக உள்ளது என்று, ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ரொஷான் டெலா பண்டார, "நாம் உண்ணும் உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் கலப்பதாக" இங்கிலாந்தின் நியூ காஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த ஆய்வின் முடிவில் "ஒரு வாரத்திற்கு தனி நபர் ஒருவர் ஐந்து கிராம் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் என்று தெரிய வருகின்றது. ஒரு கிரெடிட் கார்டின் அளவு ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் பிளாஸ்டிக்கை மனிதன் உட்கொள்கிறார்! | Person Consumes Microplastics Size Of Credit Card இது ஒரு கிரெடிட் கார்டின் அளவாக காணப்படுகிறது என்றும் அவர் கூறினார். அதன்படி, ஒரு மாதத்தில் 20 கிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் வருடத்திற்கு 250 கிராம் நுகர்வு செய்யப்படுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறினார். இது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் டொக்டர் சஜித் எதிரிசிங்க கூறுகையில், நைலோன் துணி மற்றும் நைலான் மீன்பிடி வலைகள் மூலமும் மைக்ரோபிளாஸ்டிக் நமது உடலுக்குள் செல்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன என்று அவர் கூறினார். பெரும்பாலான மைக்ரோபிளாஸ்டிக் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் நம் உடலுக்குள் செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மீழ்சுழற்சி செய்தல் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் பிளாஸ்டிக்கை மனிதன் உட்கொள்கிறார்! | Person Consumes Microplastics Size Of Credit Card மைக்ரோபிளாஸ்டிக்கை அதிகமாக உள்ளெடுப்பது, புற்றுநோயை உருவாக்க வாய்ப்புக்களை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை தாங்களாகவே அழிக்காமல், மீழ்சுழற்சி செய்யக்கூடிய மையங்களில் ஒப்படைக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதுமாத்திரமல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் அவை அதிக அளவிலான நச்சு இரசாயனங்கள் மற்றும் வாயுக்களை வெளியிடுகின்றமையினால் அதிக பாதிப்புகள் விளைகின்றது என்றும் கூறப்படுகிறது.

No comments