Vettri

Breaking News

சகோதரரின் விண்வெளி முயற்சி - நாமல் தெரிவிப்பது என்ன?




 




இந்தியாவின் சந்திராயன் குறித்தும் தனது சகோரரின் விண்வெளி முயற்சிகள் குறித்தும் நாடாளுமன் உறுப்பினர் நாமல்ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் விண்கலத்தினை தனது சகோதரர் அனுப்பிய ரொக்கட்டுடன்  தொடர்புபடுத்தி சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் - நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் தனியார் துறை முயற்சியாகவே ரொக்கட்டினை அனுப்பினார் அதில் அரசாங்கம் தொடர்புபட்டிருந்தால் மாத்திரமே அது குறித்து கோப் குழுவினர் விசாரணை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வர்த்தகர் ஒருவரின் முதலீடு குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப முடியாது அதில் அரசாங்கத்திற்கு தொடர்பிருந்தால் மாத்திரம் எதிர்கட்சி தலைவர் நாடாளுமன்ற விசாரணையை கோரமுடியும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சேற்றை வாரிவீசும்அரசியல் சூழலை அடிப்படையாக கொண்டவை இந்த கருத்துக்கள் இவ்வாறான கருத்துக்களால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்

No comments