பேருந்தில் சென்று கொண்டிருந்த சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல்...
வெலிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) மாலை குறித்த உத்தியோகத்தர் தனது கடமையை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதி
அதிகாரி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04) மாத்தறை சிறைச்சாலையில் கடமையாற்றியதாகவும், இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு சென்ற நிலையில் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை
தாக்குதலுக்கான காரணமோ, சந்தேகநபர்களோ இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments