Vettri

Breaking News

இனத்துவேசவாதியான கம்மன்பிலவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்! செல்வராசா கஜேந்திரன்




“இனத்துவேசவாதியான உதய கம்மன்பில தலைமையிலான குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கடும் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவரை அச்சுறுத்தி மௌனமாக்கவே சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கின்றது. கஜேந்திரகுமார் மீது இனத்துவேசவாதியான உதய கம்மன்பில முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களானவை உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய் . கம்மன்பிலவின் அச்சுறுத்தல் கஜேந்திரகுமாருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கொழும்பிலிருந்து அவரை வெளியேற்றும் நோக்குடனேயே உதய கம்மன்பில தலைமையிலான குழு செயற்படுகின்றது.
இந்தக் குழுவினரின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை. ஆகையால், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிரான எமது ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்.

No comments