பாடசாலை மாணவனைக் கொடூரமாகத் தாக்கிய சந்தேகநபர் தலைமறைவு!
மீரிகமவில் தொடருந்து கடவையில் சென்ற பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய அடையாளம் தெரியாத நபரொருவர் மாணவனின் புத்தகப் பையை கொள்ளையடித்துச் சென்று தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இந்த கத்திக்குத்து தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்.மீரிகம பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்த மாணவன், இன்னொரு மாணவனுடன் சேர்ந்து, தொடருந்து தண்டவாளத்தில் வில்வத்த பகுதியை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்நிலையில், காயமடைந்த மாணவனின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த மாணவர்கள் இருவரும் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை அவதானிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரினால் கொள்ளையடிக்கப்பட்ட புத்தகப்பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
No comments