Vettri

Breaking News

கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் உடற் பாகங்கள் வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானம்!




 இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கோ அமொக்சிக்லாவ் எனும் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை உட்செலுத்தியதன் பின்னர் உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்களை பரிசோதனை செய்வதற்காக வெளிநாட்டுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர்,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் தலைமையில் நேற்று(28.08.2023) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய குறித்த நபர் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.

கோ அமொக்சிக்லாவ் தடுப்பூசியை செலுத்தியதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

தற்காலிக தடை

recent vaccine issue

இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து குறித்த தடுப்பூசியானது இலங்கையின் அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில்,ஊடகவியலாளர் சந்திப்பில்,சுகாதார வல்லுனர்கள் சங்கத்தின் இணைப்பாளர்,குறித்த தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments