இருபேருந்துகள்நேருக்குநேர்மோதி_விபத்து; சாரதி பலி..!
கொழும்பு - கண்டி வீதியில் பட்டாலிய கஜுகம என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேற்றிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், ஊழியர் போக்குவரத்து பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments