அனுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம் - ஒரே குடும்பத்தில் ஐவர் தற்கொலை!!!
அனுராதபுரம் - எப்பாவல காவல்துறை பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி குடும்பத்தில் 5 ஆவது நபராக இந்த இளைஞன் இன்றைய தினம் உயிரை மாய்த்துகொண்டுள்ளார்.
இது தொடர்பான மற்றும் பல தகவல்களை இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பில் காண்க.
No comments