Vettri

Breaking News

இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம்!!!




இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிகளவான புதிய கடன் வழங்கும் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இணையவழி மூலம் கடன் இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம் | Introduce New Law Regulate Online Loan Companies இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்த பின்னணியில், இணையவழி மூலம் கடன்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முதல் கடன் தவணை இலவசம் என இணையம் மூலம் கடன் வழங்கும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், வாடிக்கையாளர்கள் தங்கள் முதல் கடன் தொகையை செலுத்திய பிறகு அதிக பணம் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனினும், அந்த கடன் தொகைக்கு 30 முதல் 40 வீத வட்டி அறவிடப்படுகிறது. ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமூலம் இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம் | Introduce New Law Regulate Online Loan Companies இந்த நிலையில், பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இணையத்தினூடாக பெற்றுக் கொண்ட கடனை செலுத்த முடியாது பலர் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக மத்திய வங்கியின், வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைக் கருத்தில் கொண்டு, இணையவழி மூலம் கடன் பெற்றுக் கொள்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதற்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம்இலங்கையில் இணையம் மூலம் கடன் வழங்க புதிய சட்டம்

No comments