Vettri

Breaking News

மீண்டும் அதிபராக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை - மைத்திரிபால சிறிசேன




 மீண்டும் அதிபராக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கம் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறிமாவோவுக்குப் பிறகு உலகையே வென்ற ஒரே அதிபர் தாம் தான் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம்

மீண்டும் அதிபராக பதவியேற்பதில் தனக்கு சிரமம் இல்லை - மைத்திரிபால சிறிசேன | Sl Presidential Election Maithripala Sirisena

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“வெட்டினாலும் நீலம், பச்சை, சிவப்பு என்று சொல்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.

இன்று வணிகர்கள், அரசு ஊழியர், மீனவர்கள், சாதாரண குடிமகன் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை.பாடசாலைகளில் போதைபொருள் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவையாக உள்ளது. இச்சிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் காண்கிறோம்.

நம்மால் முடியும். கட்சி என்ற வகையில் அதற்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன.

அதிபராக பணியாற்றியவர் என்ற வகையில், அந்த அனுபவங்களுடன் மீண்டும் அதிபராக இருப்பதில் எனக்கு சிரமம் இல்லை.சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்குப் பிறகு எனது நல்லாட்சிக் காலம் முழு உலகையும் நான் வென்ற காலம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் செயற்படும் தகுதி 8ஆவது அதிபருக்கு இல்லை” என்றார்.

No comments