Vettri

Breaking News

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அறிவிப்பு..




 நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.





நாட்டின் பல மாகாணங்களில் கடும் வரட்சி நிலவுகிறது.


குறிப்பாக வரட்சியால் வடக்கில் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குடிநீர் கிடைக்காத மாகாணங்களில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.


எனவே இவ்வாறான பகுதிளில் உள்ள மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments