இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது - அடித்துக் கூறுகின்றார் ரணில்
இனவாதப் பிரசாரச் சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தத் தரப்புக்கு ஆட்சி
அதேவேளை, ஆட்சியை எந்தத் தரப்புக்கு வழங்குவதென நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டு மக்களை எவரும் முட்டாள்களாக்க முடியாது என்றும், அவர்களே ஜனநாயகவாதிகளையும், இனவாதிகளையும் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments