இலங்கைக்கு விதித்த தடையை நீக்கியது சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம்
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதித்த தடையை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நீக்கியுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாகம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு அனுப்பிவைத்துள்ளது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்காலத்தில் இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் வரை, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு என்பன நிலைமைகளை தொடர்ந்தும் கண்காணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகத்தில் ஏற்பட்ட சில முரண்பாடுகளையடுத்து, அதன் அங்கத்துவத்தை கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments