Vettri

Breaking News

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மன்னாரில் மாபெரும் ஆரப்பாட்டப் பேரணி




சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட்(30) இன்று யதினம் மன்னாரில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் மன்னார் - சதோச மனிதப்புதைகுழி வளாகத்திலிருந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான ஆர்ப்பாட்டப்பேரணி தொடர்ந்து மன்னாரில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவகத்தை அடைந்ததும், அதற்கு முன்பும் சிறிது நேரம் கோசம் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை ஆர்ப்பாட்டப் பேரணி வந்தடைந்தது. அங்கு ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஐ.நாவிற்கு கையளிப்பதற்கான அறிக்கை வெளியிட்டதுடன், ஐ.நாவிற்கான அறிக்கையினையும் கையளித்திருந்தனர். அந்தவகைல் ஐ.நா விற்கான மகஜர் மன்னார் மறைமாவட்ட பங்குத் தந்தையர்களான ஜெயபாலன் குருஸ் மற்றும், மர்க்கஸ் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் திருச்செல்வம் பரன்சோதி, முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், முன்னாள் மன்னார் நகரபிதா ஞானப்பிரகாசம் ஜெராட், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரது ஆதரவோடும் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments