சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வலுக்கும் ஆதரவு..
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொதுமக்களும் ஆதரவுகளை வழங்கிய வண்ணம் உள்ளனர்
அண்மைக்காலமாக மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் மரணங்கள் சுகாதார அமைச்சு மீதும் இலவச மருத்துவம் மீதும் பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ளது.
இலவச சுகாதார சேவையானது, அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாக மாறியுள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.
வரலாறு காணாத
மருத்துவமனைகளுக்கு அத்தியாவசியமான தரம் வாய்ந்த, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்காமல், தரமற்ற மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலமும், மருத்துவ உபகரணங்களை முறையாக பராமாிக்காமை மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்காமை போன்ற காரணிகளால், வரலாறு காணாத அளவுக்கு உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளுக்குச் செல்வதை மரணத்தை நோக்கிய பயணமாக மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் அச்சம் பரவியுள்ளது.
இக்கட்டான நிலை
தற்போதைய அரசும் சுகாதார அமைச்சரும் சுகாதாரக் கொள்கைகளை மற்றும் பொறுப்புகளை மீறி செயற்படுவதனாலேயே சுகாதார சேவைக்கு இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.
எனவே மக்களின் ஆரோக்கியமான வாழ்வை முன்னிறுத்தி சுகாதார சேவையை பாதுக்காக்க முன்னெடுக்கப்படும் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்களும் ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர்.
No comments