Vettri

Breaking News

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வன்முறைக் கும்பல் தாக்குதல் !!!




யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments