Vettri

Breaking News

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்...




 இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(11) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இராவணன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவவில் இருந்து விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியாக உள்ளது.

மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது என்று குறிப்பிடுகிறேன்.

இராணவன் சிங்கள தலைவர் 

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்... | Ramayana Story Ravanan Tamil King Story Tamil

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக்கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.

மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இராவணனின் படை கொடியில் சிங்கத்தின் சின்னம் உள்ளது.

இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராவணன் சிங்கள தலைவர் என தெரிவித்துள்ளார்.

No comments