ஹப்புத்தளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!!
ஹப்புத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹப்புத்தளை, ஐஸ்பில்லவில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு வந்த ஐவர், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோட்டலின் உரிமையாளருடன் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, படுகாயமடைந்த ஹோட்டலின் உரிமையாளர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
47 வயதுடைய கந்தர பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தற்போது மாத்தறை மேல் நீதிமன்றில் இடம்பெற்று வரும் வழக்கு ஒன்றின் சாட்சியாளராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றவாளிகளை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments