Vettri

Breaking News

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் - நடு வீதியில் இருந்து சடலம் மீட்பு!




 பதுளை - மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் இளைஞன் ஒருவரின் சடலமொன்றை கந்தகெட்டிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த சடலத்தை இன்று (12) காலை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பதுலுஓயா, எவெந்தாவ பகுதியை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே நந்தன குமார (வயது 26) என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம்  

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் - நடு வீதியில் இருந்து சடலம் மீட்பு! | Mystery Death Sri Lanka Police Investigation

மேலும், இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் ​காவல்துறையினர் தெரிவித்தனர்.

காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 


No comments