Vettri

Breaking News

வடக்குக்கான 'யாழ் நிலா' சொகுசுரக சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பம்!!




வடக்குக்கான 'யாழ் நிலா' சொகுசுரக சுற்றுலா தொடருந்து சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இந்த தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதில் சர்வதேச சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் புறப்படவு 'யாழ் நிலா' தொடருந்து சேவை மறுநாள் அதிகாலை 5.52 அளவில் காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளது. அத்துடன் இரவு 9.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த தொடருந்து மறுநாள் அதிகாலை 5.36 அளவில் கல்கிசை தொடருந்து நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments