முட்டை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..
இலங்கையில் தற்போது நாளொன்றுக்கு முட்டை உற்பத்தி சுமார் 500,000 மடங்கு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன் காரணமாக அடுத்த வார தொடக்கத்தில் ஒரு முட்டையை 45 முதல் 46 ரூபாய் வரை நுகர்வோர் வாங்கலாம் என்றார் அவர்.
அதிகரித்த உற்பத்தி
நாட்டின் முட்டைத் தேவை கடந்த காலங்களில் 70 இலட்சமாக இருந்த போதிலும், நாளாந்த முட்டை உற்பத்தி சுமார் 50 இலட்சமாக இருந்ததாகவும், தற்போது அந்த அளவு ஐந்தரை இலட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு முட்டை உற்பத்தி அதிகரிப்பதால் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் முட்டை உற்பத்தி உபரியாக இருக்கும் எனவும், அதற்கேற்ப நுகர்வோர் சந்தையில் ஒரு முட்டையை 25 முதல் 30 ரூபா வரையில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments