பாடசாலை மாணவர்களை பாதுகாக்க சஜித் விடுத்துள்ள கோரிக்கை
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து பாதுகாக்க பாதுகாப்பு படையொன்றை ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலினால் நாட்டின் சிறுவர்கள் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் எனவும் நிகழ்நிலை பணப்பறிமாற்றம் போன்ற முறைகளின் மூலமும் போதைப்பொருள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் மாணவர்களை அடிமைப்படுத்தியுள்ளது என எதிர்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நகர மற்றும் கிராம பாடசாலைகளுக்கு செல்லும் போது பெற்றோர்கள் இவ்வாறான முறைப்பாடுகளை முறையிடுவதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அவசர வேலைத்திட்டம்
மேலும், பாடசாலை சமூகத்திலிருந்து போதைப்பொருளை அகற்றுவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், சிறுவர்களை மையமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான சட்ட அமைப்பு மற்றும் வேலைத்திட்டம் தேவை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
No comments