வங்கிகளில் டொலரின் பெறுமதியில் மாற்றம்!!!!!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் (22) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயில் சற்று தளம்பல் நிலை காணப்படுகிறது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 315.31 ரூபாய் முதல் 315.80 ரூபாய் மற்றும் 330.82 ரூபாய் முதல் 330.63 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது.
விற்பனைப் பெறுமதி
வங்கிகளில் டொலரின் பெறுமதியில் மாற்றம் | Dollar Rate Continues To Increase At Banks Today
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312.75 ரூபாய் முதல் 314.71 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments