பதுளை வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டு!!
பதுளை பொது வைத்தியசாலையின் பல வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்கட்டணத்தை செலுத்தாததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விடயத்தில் உடனடியாக தலையிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருளை வழங்கும் திறனை இழந்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நிதிப் பிரச்சினை காரணமாக இவ்வாறு எரிபொருளை விநியோகிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு விடயங்களும் ஆராயப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
No comments