கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாண தம்பதி கைது!!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான தம்பதி யாழ்ப்பாணம். சங்கானைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இளைஞனுக்கு 27 வயது, யுவதிக்கு 28 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
போலி ஆவணங்களை பயன்படுத்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாண தம்பதி கைது | Jaffna Couple Arrested At Katunayake Airport
போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments