Vettri

Breaking News

கொழும்பின் பல பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை - கோட்டை நீதிமன்றம் உத்தரவு!




 இன்று (28) பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு இன்று (28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு போராட்டம் 

கொழும்பின் பல பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடை - கோட்டை நீதிமன்றம் உத்தரவு! | Court Order Banning Entry Into Colombo City

இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அநியாய வரி விதிப்பு மற்றும் ETF, EPF கொள்ளைக்கு எதிராக கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments