நுண்ணுயிர் கொல்லி மருந்து ஏற்றப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் உயிரிழப்பு! - இரத்த மாதிரியை வெளிநாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை
நுண்ணுயிர் கொல்லி மருந்து ஏற்றப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
திங்கட்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நோயாளியின் இரத்த மாதிரி உள்ளிட்ட ஏனைய மாதிரிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த மரணத்திற்கு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
நேற்று (28) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காப்பொலயிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 50 வயதான நபரொருவரே இவ்வாறு நுண்ணுயிர் கொல்லி மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments