Vettri

Breaking News

கோழி இறைச்சி விலையில் மாற்றம் !




எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு உள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி 17ஆம் திகதி இரவு முதல் 25 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments