விவசாயிகளின் மடியில் கைவைத்த கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலையே ரணிலுக்கும் -கிளிநொச்சியில் எச்சரிக்கை!!!
பதினொரு நாட்களாக உடவளவை விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத அமைச்சர்கள் உடனடியாக இராஜினாமா செய்து பிரச்சனையை தீர்க்கக்கூடியவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என இரணைமடு விவசாய சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் இன்று கிளிநொச்சி ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், "650,000,0 வாக்குகளை பெற்ற கோட்டாபாய அரசாங்கம் விவசாயத்தின் மீது கையை வைத்து தரமற்ற பசளைகளை இறக்குமதி செய்து புதிய நோய் நிலைமையை ஏற்படுத்தி 7விவசாய அமைச்சின் செயலாளர்களை மாற்றி சர்வாதிகார போக்கில் சென்றமையால் வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏமாற்றுதனமாக செயற்படும் ரணில் அரசு
விவசாயிகளின் மடியில் கைவைத்த கோட்டாபய அரசுக்கு ஏற்பட்ட நிலையே ரணிலுக்கும் -கிளிநொச்சியில் எச்சரிக்கை | Muththusisvmogan Udavalava Issue Kilinochi
தற்போதைய ரணில் அரசாங்கமும் ஏமாற்று தனமாக செயற்படுகிறது. உடவளவை விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க முடியாத நிலையில் 30000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மின்சார அமைச்சர் ஒன்றை சொல்கின்றார். விவசாய அமைச்சர் ஒன்றை சொல்கின்றார்."என அவர் மேலும் தெரிவித்தார்
No comments