Vettri

Breaking News

பணப்பிரச்சினையால் மகனை குத்தி கொன்ற தந்தை!









 மககுருநாகல் பகுதியில் பணப் பிரச்சினை காரணமாக, தந்தை ஒருவர் அவரது மகனை ஆயுதமொன்றினால், தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறியதையடுத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை


உயிரிழந்தவர், குருநாகலை மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட தந்தை 45 வயதானவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments