விசாரணை இடம்பெறும் வேளை பதவி விலகும் அதிகாரிகள்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவில் பணியாற்றிய நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை தமது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த நான்கு அதிகாரிகளும் தனியார் துறையில் பணிக்கு செல்வதற்காக பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் பாரிய எரிபொருள் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் அதிகாரிகள் பதவி விலகுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனமொன்றில் இணைவதற்கு
விசாரணை இடம்பெறும் வேளை பதவி விலகும் அதிகாரிகள் | Four Leave The Job While Investigating The Fraud
இலங்கையில் எரிபொருள் வியாபாரத்தை ஆரம்பித்துள்ள வெளிநாட்டு நிறுவனமொன்றில் இணைவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாராகி வருவதாகவும், அந்த நால்வரில் சிலர் அதிக சந்தையைக் கொண்ட 'சிபொட்கோ' நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களை தெரிவு செய்த அதிகாரிகள் எனவும் பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனம். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் போது கமிஷன் பணம் பெற்று தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு பவுசராக எரிபொருளை வழங்க ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரி ஒருவரும் பதவி விலகல் கடிதம் வழங்கிய நான்கு அதிகாரிகளில் அடங்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
சொத்துக்கள் தொடர்பில் விசாரணை
விசாரணை இடம்பெறும் வேளை பதவி விலகும் அதிகாரிகள் | Four Leave The Job While Investigating The Fraud
இந்த அதிகாரிகள் பதவி விலகுவதற்கு முன்னர் அவர்களது சொத்துக்கள் தொடர்பில் கூட்டுத்தாபன மட்டத்திலும் ஏனைய சட்ட அமைப்புகளின் ஊடாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments