தீயில் கருகிய ஹோமாகம தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை
தீயில் கருகிய ஹோமாகம தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை
ஹோமாகம கட்டுவான கைத்தொழில் பேட்டையில் தீயினால் நாசமான தொழிற்சாலைக்கு சுற்றாடல் அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இரசாயன தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட தீ விபத்தினால் கழிவு நீர் கலந்து வளிமண்டலத்திற்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் இயங்கி வரும் குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலைகளுக்கு உரிய அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்காததற்கு கைத்தொழில் பூங்கா நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என அஜித் வீரசுந்தர குறிப்பிட்டார்.
இதற்கிடையில், எரிந்த தொழிற்சாலையை சூழவுள்ள பகுதிகளுக்கு வீணாக பயணிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
No comments