Vettri

Breaking News

பஹத் பாசில் மோகன்.ஜி நம்பரை பிளாக் பண்ணிட்டாரா.. சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம்..




 மாமன்னன் படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்த பஹத் பாசில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவரது வீடியோக்கள் தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருந்தது.

எல்லா பாடலுக்கு செட் ஆகுறாரே என சொல்லி ஜாதி பெருமை பேசும் பாடல்களை இணைத்து மாமன்னன் பட வீடியோக்களை வெளியிட்டு வந்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் பஹத் பாசிலை இயக்குனர் மோகன்.ஜி நடிக்க கூப்பிட்டதாகவும், அதனால் தான் பஹத் பேஸ்புக் கவர் படத்தை நீக்கி, மோகன் போன் நம்பரை ப்ளாக் செய்து விட்டார் என ஒரு செய்தி நேற்று வைரல் ஆகி இருந்தது.

பஹத் பாசில் மோகன்.ஜி நம்பரை பிளாக் பண்ணிட்டாரா.. சர்ச்சைக்கு இயக்குனர் விளக்கம் | Mohan G Clarifies On Fahadh Faasil Issue

இயக்குனர் விளக்கம்

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி மோகன்.ஜி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது பொய்யான செய்தி என்று குறிப்பிட்டு, தவறான செய்தி வெளியிட்ட வார இதழையும் அவர் கடுமையாக விமர்சித்து வீடியோவில் பேசி இருக்கிறார். 

No comments