நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...
நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வைத்தியசாலை அனுமதி
படுகாயமடைந்த நபரை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிடபன பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments