வாகனம் ஓட்டுவோருக்கு முக்கிய தகவல் - அடுத்த மாதம் முதல் புதிய நடைமுறை...
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தன்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.
இந்த புதிய கணனி பயன்பாட்டின் மூலம் இலங்கையில் உள்ள முழு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களும் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட உள்ளன.
வாகன பதிவு
வாகனம் ஓட்டுவோருக்கு முக்கிய தகவல் - அடுத்த மாதம் முதல் புதிய நடைமுறை | New Revenue Licence System Sep 01 New Announcement
தற்போது, வாகனம் பதிவு செய்யப்பட்ட மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகத்திலிருந்தும் வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல இலங்கையர்களும் தமது சேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொள்வதே மத்திய மாகாண போக்குவரத்து திணைக்களத்தின் நோக்கமாகும் என்றும் மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments