Vettri

Breaking News

வவுனியா மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!




வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் மதுபானசாலையொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில், கடந்த 18ஆம் திகதி நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments