Vettri

Breaking News

வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது!!!




வவுனியா - தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தைச் சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வவுனியா இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது | Main Suspect Arrested In Vavuniya Murder Case இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாசினி தேவராசா நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments