Vettri

Breaking News

நீர்கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் - காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...




 நீர்கொழும்பு பிட்டிப்பன மீன் சந்தைக்கு அருகில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த சந்தைக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் இளைஞன் தலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்புக்கு வடக்கே பிட்டிப்பன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய தனுஷ்க அஞ்சன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு

 நீர்கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் - காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Negombo Man Killed Mistakenly In Sri Lanka

இந்த கொலை சம்பவம் சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட தவறினால் இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு காவல்துறை அத்தியட்சகர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

குறித்த இளைஞன் பிட்டிப்பன லெல்லம என்ற இடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரால் அவரது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது, ​​பிட்டிப்பன லெல்லம மீன் சந்தைக்கு அருகில் அதிகளவான மக்கள் சுற்றித் திரிந்த நிலையில், சந்தேகநபர்கள் இளைஞனைக் கொன்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

காதல் விவகாரம்

நீர்கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் - காவல்துறையினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Negombo Man Killed Mistakenly In Sri Lanka

இந்த நிலையில் சாதாரண காதல் விவகாரத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் தொடர்பில்லாத நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞரைப் போன்று மேலும் ஒருவர் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமன் சிகேரா மற்றும் காவல்துறை அத்தியட்சகர் எரிக் பெரேரா ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக துங்கல்பிட்டிய காவல் நிலைய பதில் காவல்துறை பொறுப்பதிகாரி ரோஹன சில்வா இந்த கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் உயிரிழந்த இளைஞருக்கு கிடைத்த தொலைபேசிச் செய்தி இலக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வது கடினம் அல்ல என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


No comments