Vettri

Breaking News

இராமாயண சர்ச்சை - புதிய புரளியை கிளப்பும் உதய கம்மன்பில..




 இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பதை இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆகவே , மகாவம்சத்துக்கு அப்பாற்பட்ட வரலாற்றை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (11.08.2023) இடம்பெற்ற இராணவன் மன்னன் மீதான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

''உலகில் நாங்கள் நீண்ட வரலாறுகளை கொண்டமையினால் மகாவம்சம் தொடர்பில் மாத்திரம் கதைத்து கொண்டிருக்கின்றோம். அதற்கு அப்பாலும் எமக்கு வரலாறுகள் உண்டு.

இராமாயணத்தில் எமது வரலாறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இராவண மன்னன்

இராமாயண சர்ச்சை - புதிய புரளியை கிளப்பும் உதய கம்மன்பில | Udaya Gammampila About Ravanan Pushpaka Vimaanam

தொழில்நுட்பத்தில் நாங்கள் எந்தளவு முன்னேற்றத்தில் இருந்துள்ளோம் என்பதை இராவணனின் புஷ்பக விமானம் எடுத்து காட்டியுள்ளது. இராவணனை நாங்கள் வணங்குகின்றோம்.

இராவணன் என்பவர் மருத்துவம், ஜோதிடம் விளையாட்டு உள்ளிட்ட 10 விடயங்களில் தலை சிறந்தவராக இருந்த காரணத்தினாலேயே அவரை நாங்கள் பத்து தலை இராவணன் என்று அழைக்கின்றோம்.

இராமாயணத்தை எமது எதிரிகளின் கதை என்றே கூறலாம். எல்லா கதைகளிலும் மூன்று கதைகள் இருக்கும் நண்பர்கள் கதை, எதிரிகள் கதை,இரண்டுக்கும் நடுவில் உள்ள உண்மையான கதை என இருக்கும். இதன்படி இராமாயணம் எதிரிகளின் கதையாக உள்ளது. எனினும் உண்மை கதை வேறு எனவும் தெரிவித்தார்.

நமது வரலாற்றில் பழங்குடியில் கண்டெடுக்கப்பட்ட எமது மனித வாழ்க்கை வரலாறுகள் 44 ஆயிரம் வருடங்கள் பழமையானது.

இது தொடர்பாக முறையான ஆய்வுகளை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments