கடற்படை வீரர், நீரில் மூழ்கி உயிரிழப்பு...!
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம்,
பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளன.
குறித்த வீரர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுவன, தொடந்துவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments