அதிகார பகிர்விற்கு நிபுணர்குழுவா அனைவரையும் ஏமாற்றும் செயல்?
13ஆம் திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்கான அதிகாரங்களை பரவலாக்குவது தொடர்பில் நிபுணர்கள் குழுவை ஜனாதிபதி நியமிப்பது என்பது இந்த நாட்டு மக்களையும் இந்தியா உட்பட சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - வாவிக்கரை பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 13ஆம் திருத்தச் சட்டத்தில் காவல்துறை அதிகாரம் ஏற்கனவே, வழங்கப்பட்டு மீளப் பெறப்பட்ட ஒன்றாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments