மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் அதிகாரப்பூர்வ நாணயம் வெளியீடு..
இரண்டாம் எலிசபெத் ராணியில் இருந்து மூன்றாம் சார்ல்ஸ் மன்னராக வரலாற்று மாற்றத்தை குறிக்கும் வகையில் நாணயம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்ல்சின் முடிசூடலை குறிக்கும் வகையிலேயே இச்சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நாணயம்
இதுதொடர்பாக, இங்கிலாநது நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம் தெரிவிக்கையில்,நாடு முழுவதுமுள்ள தபால் அலுவலகம் மற்றும் வங்கிக் கிளைகளில் 50பென்ஸ் சிறப்பு நாணயங்களை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்நாணயமானது, மன்னரின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள இரண்டாவது நாணயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments