இந்தியாவில் இருந்து 92 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன!!
மூன்று மாதங்களுக்கு 92.1 மில்லியன் முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உள்ளூர் சந்தையில் முட்டை விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி அளித்தது.
No comments