பணத்துக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் : நள்ளிரவில் பதுங்கியிருந்து 9 இளைஞர்களை பிடித்த பாணந்துறை பொலிஸார்!
பணத்துக்கு பந்தயம் பிடித்து மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட ஒன்பது இளைஞர்கள் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ இதிபெத்த மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் 20 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெறவுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் பதுங்கியிருந்த பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இதன்போதே நான்கு மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments